நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவராக ராஜேஷ் குமார் பொறுப்பேற்பு. மாநில தலைவர் அண்ணாமலை பதவி பிரமாணம் செய்து வைத்தார்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மேற்குமாவட்ட தலைவர் பொறுப்பேற்பு விழா திருச்செங்கோடு கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது மாவட்ட தலைவராக ராஜேஷ் குமார் பொறுப்பேற்று உள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இந்த பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய போது கூறியதாவது ஜனநாயகத்தின் ஆரோக்கியமான விஷயம் போட்டியிருக்க வேண்டும். பாஜக அடுத்த நிலைக்கு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாஜக உண்மையான ஜனநாயக கட்சி 40 ஆண்டுகள் நிரந்தர தலைவராக பொதுச் செயலாளராக உள்ளனர். 33 மாவட்ட தலைவர்கள் அறிவித்துள்ளோம் மீதமுள்ள மாவட்டங்களுக்கு விரைவில் அறிவிப்பு வரும். நமது கட்சியில் தோற்று விட்டார்கள் என்ற வாசகம் கிடையாது. போட்டியிட்டவர்களில் ராஜேஷ் குமார் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வளர்ச்சி வேகமாக உள்ளது. 1 கோடி உறுப்பினர் 2 கோடி உறுப்பினர் சேர்த்து விட்டோம் என்று நீங்களாக சொல்கிறீர்கள். முதல் கட்டமாக 48 லட்சம் பேர் பாஜகவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப் பட்டுள்ளனர். முழு நேரமாக வேலை செய்ய தீவிர உறுப்பினர்கள் 55 ஆயிரம் பேர் பாஜகவில் உள்ளனர். மாநில தலைவர் தேர்தல் முடிந்த பிறகு 2 ம் கட்ட உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். இணைய விரும்பியவர்கள் முதல் கட்டம் நாமாக சென்று சேர்ப்பது 2ம் கட்டம் . 1 கோடி உறுப்பினர் களை சேர்த்து விட்டால் 2026 ல் நாம் ஆட்சியை பிடிப்பது நிச்சயம் இந்த மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளை வெல்ல கடுமையாக உழைக்கணும். ஆட்சி மாற்றம் வர வேண்டும் ரோடு குண்டு குழியுமாக உள்ளது. அதிகாரத்தில் இருப்பவர் சேகர்பாபு போல ஏளன பேச்சு பேசினால் அழிவு நிச்சயம் என்பது அடையாளம். உதயநிதி மகனுக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் நிற்கும் அவல நிலை அலங்கா நல்லூரில் நடந்துள்ளது. தென்னிந் தியாவில் கல்வித் தரத்தில் பின் தங்கிய மாநிலமாக தமிழ்நாடு கடந்த 3 ஆண்டுகளாக உள்ளது. IAS தேர்வில் 40 ரேங்கில் உள்ளனர். அடுத்த கட்டத்திற்கு மாணவர்கள் தயார் படுத்தப் படவில்லை. விவசாயத்தில் முதல் 10 மாசுபட்ட ஆறுகளில் 6 தமிழகத்தில் உள்ளது. சுற்றுசூழல் மைனிங், மணல் எடுப்பது, ஆழ்துளை கிணறுகள் என அதிகரித்து வெப்பம் அதிகமாகி வருகிறது. 2 நாட்களுக்கு ஒரு முறை செவிலியர் பிரசவம் பார்த்து குழந்தை இறப்பு செய்தி வருகிறது. ஆணவ படுகொலைகள், பாலியல் வன்முறை என அதிகரித்து வருகிறது. எல்லாம் தோல்வி டாஸ்மாக் மட்டும்தான் சக்சஸ், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவன படங்கள் தயாரித்து வந்தவர்கள் டைரக்க்ஷன் செய்கிறார்கள். வேங்கை வயல் குறித்து முதல்வர் பேசுவதில்லை. அண்ணா பல்கலையில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை காவல் துறை பொங்கல் விழாவில் 8 பேர் செயின் பறிப்பு. அதனால் தான் மாற்றம் தேவை என்கிறோம் அனைத்தும் பெயிலியர் உறுப்பினர் அட்டையில் உள்ள 5 செய்திகளை ஏற்றுக் கொண்டால் தான் உறுப்பினராக முடியும். பொன்முடி பேசும் போது நீ Sc தானே என கேட்கிறார். இவர்கள் சமூக நிதியை பற்றி பேசுகிறார்கள். முதல்வருக்கு மாற்று என்பதில் 28, 33, 35வது இடத்தில் பட்டியில் இனத்து அமைச்சர். உட்கட்சியில் சமூக நீதி கிடையாது. இவர்கள் நமக்கு சமூகநீதி குறித்து பாடம் எடுக்கிறார்கள். இவர்கள் கொடுப்பது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர். அம்பேத்காரை தூக்கி கொண்டு திரிகிறார்கள். அம்பேத்கார் விலகியதற்கு காரணம் உரிய அங்கிகாரம் தரப்படவில்லை என்பது தான். அம்பேத்கார் ராஜினாமா கடிதம் காணவில்லை 2 மதங்களை வைத்து அரசியல் செய்பவர்கள் நம்மை மதவாதிகள் என்கிறார்கள். இப்தார் விருந்தில் மட்டும் குல்லா போட்டு உட்காருபவர்கள் மதசார்பின்மை குறித்து பேசிகிறார்கள். 46 லட்சம் கோடி கடன் வாங்கி கடன்கார மாநிலமாக குடிகார மாநில மாற்றி வைத்துள்ளனர். இவர்களை வீட்டுக்கு அனுப்ப நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது டெல்லி தேர்தலில் இலவசங்களை எதிர்க்கிறோம் என சொல்லும் பாஜக இலவசங்களை வாரி வழங்குகிறது இது சரியா என கேட்டதற்கு நான் தமிழகத்திற்கு தான் தலைவர் மராட்டியத்தில் என்ன நடக்கிறது மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது டெல்லியில் என்ன நடக்கிறது என்பதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது தமிழகத்தை பொறுத்தவரை தமிழகம் 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது இதை கட்டி முடிக்க இன்னும் கட்ட பல ஆண்டுகளாகும் தமிழகத்தில் அடிப்படை தேவைகளுக்கு செலவு செய்வதில்லை ஏனென்றால் தேவையில்லாதவைகளுக்கு அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கின்றோம். நான் வந்திருப்பது அரசியலை தூய்மை செய்வதற்காக மூன்று லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் போடுகிறீர்கள் என்றால் 60,000, 70 ஆயிரம் கோடிகள் எதற்காக செலவு செய்கிறீர்கள் என்பதே தெரியவில்லைமக்கள் நலனுக்காக இலவசங்கள் வழங்கினால் ஏற்றுக் கொள்வோம் வாக்கு அரசியலுக்காக வழங்கினால் அதனை கடுமையாக எதிர்ப்போம் தமிழகத்தில் திராவிட ஆட்சியால் தான் அருந்ததிய மக்கள் மருத்துவ படிப்பிற்கு அதிக அளவில் சேர முடிகிறது என அமைச்சர் மதிவந்தன் கூறிஉள்ளாரே எனக் கேட்டபோது அருந்ததிய சமுதாய மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி இன்றைக்கு கொடுத்து படிக்கச் சொல்லும் நீங்கள் சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆகிறது எத்தனை முறை நீங்கள் ஆட்சியில் இருந்திருக்கிறீர்கள் திமுக ஐந்து முறை ஆட்சியில் தற்போது ஆறாவது முறையாகும் ஆட்சியில் இருந்து வருகிறது அப்போதெல்லாம் என்ன கழட்டினீங்க எண்ணத்தை கிழிச்சீங்க என அமைச்சரிடம் நான் கேட்கிறேன்இன்றைக்கும் பட்டியல் சமுதாயம் கல்வியில் பின்தங்கியுள்ளது என்று வாய் கிழிய பேசி வருகிறீர்கள் 75 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் ஒரு கட்சி பட்டியல் சமுதாய மாணவர்களை உயர்த்துவதற்கு என்ன செய்து உள்ளீர்கள் இன்றைக்கு எல்லோரும் தொழில் முனைவோராகவும் பொருளாதாரத்தில் முன்னேறுகிறவர்களாக மாறியிருப்பார்கள் இன்னும் 50 ஆண்டுகள் இதையே தான் பேசி வருவார்கள் தமிழகத்தில் இன்னும் சில சமுதாயங்கள் பின்தங்கி உள்ளது என பேசி வருவார்கள் என திருச்செங்கோட்டில் நடைபெற்ற பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழாவை முடித்த பின்பு செய்தியாளர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
Next Story

