ஆம்பூர் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து

ஆம்பூர் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து 4 பேர் படுகாயம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து 4 பேர் படுகாயம், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.. திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது ஏற்பட்ட சோகம்.. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜவேல், இவர் தனது மனைவி மற்றும் உறவினர்கள் 2 பேருடன் காரில், ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பிய போது, திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த ஜமீன் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, சாலையில் முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி சாலையோரம் உள்ள உணவகத்திற்கு செல்ல வளைந்த போது, பின்னால் ராஜவேல் ஓட்டி வந்த கார் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில், காரில் பயணம் செய்த ராஜவேல் மற்றும் அவரது மனைவி உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர், உடனடியாக காரில் சிக்கிய ராஜவேல் மற்றும் அவரது குடும்பத்தினரை அப்பகுதி மக்கள் போராடி மீட்டு அவர்களை சிகிச்சையிற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அதனை தொடர்ந்து இவ்விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்...
Next Story