திரைப்பட இயக்குனர் சீமான் குறித்து வெளியிட்ட முகநூல் பதிவால் பரபரப்பு

X
Komarapalayam King 24x7 |19 Jan 2025 9:15 PM ISTசீமான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் எடுத்ததாக கூறப்படும் புகைப்படம் என்னால் மார்பிங் செய்து தரப்பட்டது என வெங்காயம் திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தனது முகநூலில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்
சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள அன்செட்டிப்பட்டி பகுதியில் சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் வெங்காயம் பயாஸ்கோப் போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார் தற்பொழுது தந்தை பெரியார் குறித்து அவதூர் கருத்துக்களை பேசி வரும் சீமான் பல்வேறு தரப்பினரால் விமர்சனம் செய்யப்பட்டு வரும் சூழ்நிலையில் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் தனது முகநூல் பக்கமான சங்ககிரி ராஜ்குமார் என்ற பயனுள்ள முகநூலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உடன் இருப்பது போல் உள்ள ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அதில் இந்த புகைப்படத்தை மார்பிங் செய்து கொடுத்தது நான் தான் என பதிவிட்டுள்ளார். இது குறித்து அவரை சந்தித்து கேட்டபொழுது தான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டிசைன் எடிட்டிங் பணியில் இருந்த பொழுது அந்த தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த செங்கோட்டையன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் இரு புகைப்படங்களையும் இணைத்துக் கொடுக்க கேட்டதற்கு எனக்கு இணங்க இந்த புகைப்படத்தை தான் தயார் செய்து கொடுத்ததாகவும் இது ஒரு சர்ப்ரைஸ் ஆக சீமானுக்கு வழங்கப்போவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார் இந்நிலையில் அந்த புகைப்படத்தை பயன்படுத்திக் கொண்டு விளம்பரங்களை நாம் தமிழர் கட்சி சீமான் பரப்பிக் கொண்டிருந்தார் இடைப்பட்ட காலத்தில் ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த புகைப்படம் சினிமா பட எடிட்டர்களால் தயார் செய்யப்பட்டது என விமர்சனம் செய்யப்பட்டது அப்பொழுது எங்களுக்குள் கருத்துக்கள் பரிமாற்றம் நடைபெற்றது அப்பொழுது தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் செங்கோட்டையன் என்னிடம் இது அவர்களால் பேசப்பட்ட கருத்து நாம் யாரிடமும் உண்மை சம்பவத்தை கூற வேண்டாம் என தெரிவித்து இருந்தார் இருப்பினும் தற்பொழுது நான் இந்த முகநூலில் பதிவு செய்துள்ளேன் என்று தெரிவித்தார்
Next Story
