ரவுடியால் தாக்கப்பட்ட மனைவி உயிரிழந்தார்

ரவுடியால் தாக்கப்பட்ட மனைவி உயிரிழந்தார்
X
ரவுடி மீது கொலை வழக்கு பாய்ந்தது
சேலம் ஜாகீர்அம்மாபாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (37). பிரபல ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்பட 10 வழக்குகள் இருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு ராஜேஸ்வரி, வளர்மதி (34) என 2மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி ராஜேஸ்வரி, ஜாகீர்அம்மாபாளையத்தில் வசித்து வருகிறார். இவருக்கு 2குழந்தைகள் உள்ளனர். 2வது மனைவி வளர்மதி (34). இவருக்கு வாய் பேச முடியாத நிலையில் 10வயதில் மகன் இருக்கிறான். வளர்மதியின் மேல், ரவுடி சரவணனுக்கு சந்தேகம் எழுந்தது. அடிக்கடி அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த 12ம் தேதி அதிகாலை 3மணிக்கு, வளர்மதி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரை சரவணன் கட்டையால் அடித்ததில் வளர்மதியின் தாடை எலும்பு உடைந்தது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று வளர்மதி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், இரும்பாலை போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, ரவுடி சரவணனை கைது செய்தனர். பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, வளர்மதி உயிரிழந்ததால், கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story