மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக சென்று மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக சென்று மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் தங்கவேல். கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வாரம்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த முகாமில் தங்களது குறைகள் குறித்த மனுக்களை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து பொதுமக்கள் வரிசையில் நின்று மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து தங்களது குறைகளுக்கு தீர்வு காண்பார்கள். அதே சமயம் மாற்றுத்திறனாளிகளால் நீண்ட தூரம் நடக்கவும், வரிசையில் நீண்ட நேரம் நிற்க்கவோ இயலாது என்பதால், அவர்களுக்கு என்று தனி இடம் ஒதுக்கி அங்கு அவர்களை அமர வைத்து, அவர்களை தேடிச் சென்று மாவட்ட ஆட்சியர் மனுக்கள் பெற்று தீர்வு கண்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக சென்று மனுக்களை பெற்று, அவர்களது குறைகள் அறிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக அதற்கு தீர்வு காண உத்தரவிட்டார். தாங்கள் அளித்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.
Next Story




