பூச்சி மருந்து சாப்பிட்டு ஒருவர் தற்கொலை

பூச்சி மருந்து சாப்பிட்டு ஒருவர் தற்கொலை
X
மதுரை அருகே பூச்சி மருந்து சாப்பிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் கருவேலம்பட்டி இந்திரா காலனியில் வசிக்கும் சண்முகசுந்தரத்தின் மகன் மலைச்சாமி (44) என்பவர் மதுவுக்கு அடிமையானவர். தினமும் மது அருந்தி வருவதால் மனைவி பாண்டியம்மாள் கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஜன.19) காலை வீட்டில் இருந்த மலைச்சாமி பூச்சி மருந்தினை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பாண்டியம்மாள் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story