வீட்டிற்குள் புகுந்த காட்டு யானை- வடமாநில இளைஞர்கள் அதிர்ச்சி!

வீட்டிற்குள் புகுந்த காட்டு யானை- வடமாநில இளைஞர்கள் அதிர்ச்சி!
X
கோவை தெக்குபாளையம் பகுதியில், நான்கு வடமாநில இளைஞர்கள் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டிற்கு திடீரென வந்த காட்டு யானையால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவை தெக்குபாளையம் பகுதியில், திலகராஜ் என்பவர் சொந்தமான வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த நான்கு வடமாநில இளைஞர்கள், திடீரென வந்த காட்டு யானையால் அதிர்ச்சியடைந்துள்ளனர். யானை, அறையின் உட்பகுதியில் இருந்த எரிவாயு அடுப்பு மற்றும் குக்கரில் இருந்த உணவை தள்ளிவிட்டு, அரிசியை இழுத்துத் தின்றுள்ளது. மேலும், அறையில் இருந்த பிற பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Next Story