வாய்க்கால் பாலம் இரண்டாக உடைந்ததால் விவசாயிகள் பாதிப்பு

வாய்க்கால் பாலம் இரண்டாக உடைந்ததால் விவசாயிகள் பாதிப்பு
X
நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் பாஜக நிர்வாகி எச்சரிக்கை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூரில் உள்ள வாய்க்கால் பாலம் பல மாதங்களாக பழுதடைந்து காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று இரண்டாக உடைந்து விட்டதால். பொதுமக்கள், விவசாயிகள், வாகன ஓட்டிகள் இவ்வழியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இவ்வழியே தான் 500 ஏக்கரில் விளைவித்த நெல் அறுவடை செய்யும் நிலையில் விவசாயிகள் உள்ளனர். மேலும் இடுகாட்டிற்கு செல்லும் ஒரே வழியாக உள்ளது. உடனடியாக மாற்றுப் பாலம் அமைத்து தர வேண்டுமென பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் ரஞ்சித் குமார் கோரிக்கை விடுத்துள்ளார். தாமதம் ஏற்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story