திருத்தங்கல்லில் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாமன்ற உறுப்பினர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ...*

திருத்தங்கல்லில்  தனியார்  செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாமன்ற உறுப்பினர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம்  மனு ...*
X
திருத்தங்கல்லில் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாமன்ற உறுப்பினர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ...*
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாமன்ற உறுப்பினர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ... விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் மேல ரத வீதியில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் சுமார் 200 அடி உயரம் கொண்ட அலைபேசி கோபுரம் அமைப்பதற்கு பாதிக்கும் மேல் வேலை நடந்துள்ளது எனவும், இதில் வரும் கதிர்வீச்சினால் அந்த பகுதியை சுற்றியுள்ள கர்ப்பிணிப் பெண்களும், முதியவர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் மேலும் மூன்று தனியார் மருத்துவமனைகளும் உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் இது சம்மந்தமாக மனு அளித்துள்ளதாகவும்,அதையும் மீறி செந்தில்குமார் என்பவர் அலைபேசி கோபுரம் அமைப்பதற்கு அனுமதி கொடுத்து பாதிக்கும் வேலை நடந்துள்ளது எனவும், இதற்கு முறையாக காவல் துறையினரிடமும், வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சியிடமும் அனுமதி வாங்காமல் வேலை நடைபெற்று வருவதாகவும், உடனடியாக இந்த வேலையை நிறுத்த கோரி சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திமுக, அதிமுக, விசிக, சுயேட்சை என 33 மாமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்
Next Story