அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறையும் ,சென்னை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமும் இணைந்து பெரம்பலூர் மாவட்ட அறிவியல் ஆசிரியர்களுக்கு ஐந்து நாள் பணியிடை பயிற்சி முகாம் 20.01.2025 கல்லூரியின் கலையரங்கத்தில் கல்லூரி முதல்வர் முனைவர் து சேகர் முன்னிலையில் நடைபெற்றது. தன்னுடைய உரையில் மாணவர்கள் பல்கலை வித்தகராக வளர்வதற்கு அறிவியலும் கலையும் மிக முக்கியமாக விளங்குகிறது என கூறினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகம்மாள் அம்மா தன்னுடைய தலைமை உரையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டம் பத்தாம் வகுப்பிலும் 12 ஆம் வகுப்பிலும் முதல் மூன்று இடங்களை மாநில அளவில் பெற்றதற்காக புத்தாக்க பயிற்சியில் கலந்து கொண்ட அறிவியல் ஆசிரியர்களை பாராட்டியும், மாணவர்களுக்கு அறிவியல் கல்வியை கொண்டு சேர்ப்பதால் அவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படும் எனவும், அவர்களால்தான் சமுதாயத்தில் காணப்படும் மூட நம்பிக்கையை ஒழிக்க முடியும் என்றார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆட்சி குழு உறுப்பினரும் மைக்ரோ பயாலஜி துறை தலைவருமான முனைவர் ராஜேஷ் கண்ணன் தன்னுடைய சிறப்புரையில் மாணவர்கள் பயின்ற கல்வியால் மட்டுமே பகுத்தறிவு வளரும் , நல்ல கல்வி வல்லுனர்களாக வளர்வதற்கு அறிவியல் கல்வி அவசியம் என்றும் கூறினார். வேப்பந்தட்டையில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் அறிவியல் அறிஞர் கல்லூரியின் முதல்வர் முனைவர் சோமசுந்தரம் தன்னுடைய வாழ்த்துரையில் சொட்டுநீர் பாசனம் எவ்வாறு அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய பெருமக்கள் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துரை வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தின் மாவட்ட கல்வி அலுவலர் செல்வகுமார் தன்னுடைய வாழ்த்துறையில் தற்பொழுது பள்ளிகளில் செயல்படுத்தி வரும் வானவில் மன்றம் மணற்கேணி முதலிய செயலிகளை பயன்படுத்தி ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என கூறினார். இப்பணியிடை பயிற்சியில் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 50 அறிவியல் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இப்பணியிடை பயிற்சியின் ஒருங்கிணைப்பாளரும் இயற்பியல் துறை தலைவருமான முனைவர் பி பாஸ்கரன் வரவேற்புரை வழங்கினார். கணினி அறிவியல் துறை பேராசிரியர் முனைவர் ராமராஜ் நன்றி உரை கூறினார். பணிடை பயிற்சியினை இயற்பியல் துறையின் பேராசிரியர் செல்வ பிரியா தொகுத்து வழங்கினார்.
Next Story




