விழிப்புணர்வு வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும்பணி

X
சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விருத்தாசலம் பாலக்கரையில் விருத்தாசலம் போக்குவரத்து துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரிலும், விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆலோசனையின் பேரிலும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் தலைமை காவலர்கள் முத்துக்குமரன், சரவணன், வசந்த் ஆகியோர் விருத்தாசலம் பாலக்கரையில் வந்த வாகனங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது குடிபோதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது. இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் செல்லக்கூடாது. சிறுவர்கள் வாகனத்தை இயக்கக் கூடாது. ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை இயக்கக் கூடாது. தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டக்கூடாது. போன்ற அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், அங்கு வந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முகப்பு விளக்கில் அதிக வெளிச்சம் ஊடுருவலை தடுக்கும் வகையில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story

