ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை

X
திருச்சி, பீம நகர், கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (49). இவர் கவுகர் ஜான் (50) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். வெங்கடேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் குடிபழக்கத்திற்கு அடிமையாகி அதிகளவில் குடித்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி கவுகர் ஜான் மற்றும் அவரது மகன் தியானேஷ் ஆகியோர் வெங்கடேசை கண்டித்துள்ளனர். இனத்தொடர்ந்து கடந்த ஜன. 18ம் தேதி தன் அறைக்கு உறங்கச்சென்ற வெங்கடேஷ் ஜன.19ம் தேதி வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை சந்தேகமடைந்து அவரது அறையின் உள்ளே சென்று பார்த்தபோத வெங்கடேஷ் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் செஸன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

