திருப்பூர் பனியன் உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து

திருப்பூர் பனியன் உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து
X
திருப்பூர் பனியன் உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து - தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் திருமுருகன்பூண்டி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் 30 ஆண்டுகாலமாக பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.3 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் தரைத்தளத்தில் அலுவலகமும் சாம்பிள்கள் ( மாதிரி ஆடைகள் ) வைத்திருக்கும் இடமும் , 2 மற்றும் 3ஆம் தளத்தில் பின்னலாடை உற்பத்தி மற்றும் பேக்கிங் பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பொங்கல் விடுமுறை முடிந்து இன்றைய தினம் நிறுவனம் திறக்கப்பட்டு பணியாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். காலை 11.30 மணியளவில் திடீரென தரைத்தளத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனை கண்டு பணியில் இருந்த நிறுவன ஊழியர்கள் வெளியேறி உள்ளனர். நிறுவனத்தில் இருந்த தீ தடுப்பான்கள் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வந்த வடக்கு தீயணைப்பு துறையினர் 2 வாகனங்களில் தரை தளத்தில் பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் காரணமாக 2 மற்றும் 3ஆம் தளங்களில் தீ பரவுவது தவிர்க்கப்பட்டது. இருப்பினும் முதல் தளத்தில் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மேசை உள்ளிட்ட சாமான்கள் மற்றும் பனியன் உற்பத்தி செய்யப்பட்ட மாதிரி ஆடைகள் எரிந்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story