தேசிய நெடுஞ்சாலையில் கார்,லாரி மோதியதில் பெண் பலி
சென்னை, கஸ்பாபுரம் சாய் பாலாஜி நகரை சேர்ந்தவர்கள் ரிச்சன் (49), இவரது மனைவி ஏஞ்சலின் கிருபா (36). மற்றும் ஜெஃப்ரின் (18) ஆபிரஹாம் ஆகியோர் தூத்துக்குடியில் பொங்கல் விடுமுறையை கொண்டாடிவிட்டு நேற்றிரவு தூத்துக்குடியில் இருந்து சென்னையை நோக்கி Maruti ertiga காரில் சென்றுக் கொண்டிருந்தனர். கார் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், சின்னாறு அருகே இன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் டிரக் பார்க் அருகே சென்றுக் கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து, சென்னையில் இருந்து மதுரையை நோக்கி சென்ற Eicher லாரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஏஞ்சலின் கிருபா உயிரிழந்தார். காரில் வந்த மற்றவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து தகவல் விபத்து மீட்பு படையினர் மற்றும் மங்கலமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, சிகிச்சைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் பலியான ஏஞ்சலின் கிருபாவின் சடலத்தை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story



