எமன் வேடம் அணிந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

X
இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் பல்லடம் துணைக் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் மேற்பார்வையில், போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்லடம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் கோவை கதிரவன் கலை குழுவினர் எமன் வேடம் அணிந்தும், கரகாட்டம் ஆடியும் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக வாகன ஓட்ட வேண்டும், தலைக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள், போக்குவரத்து விழிப்புணர்வு கருத்துக்களை விளக்கிப் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். எமன் வேடம் அணிந்து நடத்திய கலை நிகழ்ச்சி பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்தனர். இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, உதவி ஆய்வாளர்கள் அன்புராஜ், பார்த்திபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

