காங்கேயம் ஊதியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரசு பள்ளியில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது. காவல்துறை விசாரணை

X
காங்கேயம் ஊதியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரசு பள்ளி மாணவியிடம் ஆசிரியர் சிவக்குமார் (54) சீண்டலில் ஈடுபட்டதாக கூறி ஊதியூர் மற்றும் காங்கேயம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியரால் வேறு மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர என விசாரணை
காங்கேயம் அடுத்துள்ள ஊதியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியில் பணியாற்றுபவர் சிவகுமார் (54) என்ற ஆசிரியர். இவர் பொங்கல் விடுமுறைக்கு முன்பு அங்கு படித்து வரும் ஒரு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் அதுகுறித்து அந்த மாணவி விடுமுறை தினத்தில் ஊருக்கு சென்ற போது அங்குள்ள உறவினரிடம் அந்த மாணவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து உறவினர் காவல்துறை கட்டுப்பாட்டு அறை புகார் எண் 100க்கு புகார் தெரிவித்து உள்ளார்.இதை அடுத்து பொங்கல் பண்டிகை முடிந்து இன்று பள்ளி தொடங்கிய நிலையில் ஊதியூர் மற்றும் காங்கேயம் அனைத்து மகளிர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஆசிரியர் சிவகுமாரை காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆசிரியர் சிவகுமார் அதே பள்ளியில் படிக்கு வேறு மாணவிகளுக்கு இதே போல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாரா ? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலியே பயிரை மேய்த்த பழமொழிக்கு ஏற்ப பள்ளி ஆசிரியரே சிறுமியான மாணவிக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்டது ஊதியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 3 நாட்களில் காங்கேயம் அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 போக்சோ வழக்குகள் போடப்பட்டுள்ளது. ஒன்று 4 வயது குழந்தைக்கு 62 வயது முதியவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது. மற்றொன்று 22 இளைஞர் 14 வயது சிறுமியை அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டதை பெற்றோர்கள் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மாணவியிடம் ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகார் இதே காவல் நிலையத்தில் வந்துள்ளது பெற்றோர்களின் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினர் காங்கேயம் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவியர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது.
Next Story

