அரசு வேலை வாங்கித் தருவதாக அரசுப் பள்ளி ஆசிரியர் மோசடி
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி(55) மாற்றுத்திறனாளி ஆன இவர், பத்தாம் வகுப்பு வரை படித்த அவரது மகனுக்கு அரசு வேலை வேண்டும் என்று தெரிந்தவர்களை அணுகியுளார். அப்போது கல்பாடி அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் பாரிவள்ளல் என்பவர், மாவட்ட ஆட்சியரகத்தில் அலுவலக உதவியாளர் பணி காலியாக இருப்பதாகவும். அதற்கு மூன்று லட்சம் பணம் பணம் கொடுத்தால் அதனை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய ரவி வீட்டில் இருந்த நகைகளை வங்கியில் அடகு வைத்து ஆசிரியர் பாரிவள்ளலிடம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் வேலையும் வாங்கி தராமல். கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் பாரிவள்ளல் காலம் கடத்தி வந்ததாக தெரிய தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட ரவி பலமுறை புகார் தெரிவித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரவி ஆட்சியர் அலுவலக வாயில் முன் திடீரென உடலில் மீது பெட்ரோலை ஊற்றி தீ குழிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் அவரை தடு நிறுத்தி தீயணைப்பு நுறையினர் மூலம் அவர் மீது தண்ணீரை பீச்சி அடித்தனர். பின்னர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story



