தொழு நோய் விழிப்புணர்வு முகாம்- மாவட்ட ஆட்சியர் தகவல்

தொழு நோய் விழிப்புணர்வு முகாம்- மாவட்ட ஆட்சியர் தகவல்
X
தகவல்
தேனி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகள் அரசு மருந்து நிலையங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் தொழுநோய் ஒழிப்பு உருது மொழி ஏற்றல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தைகள் அரசு அலுவலகங்கள் தனியார் அலுவலகங்கள் உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டுபிடிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் எம் சுப்புலாபுரம் தேவதானப்பட்டி மற்றும் கூடலூர் ஆகிய வட்டாரங்களில் அனைத்து வீடுகளுக்கும் சென்று தொழுநோய் அறிகுறிகள் உள்ளவர்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக 31.1.2025 முதல் 15.2.2025 வரை தொழுநோய் கண்டுபிடிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது . தொழுநோய் இல்லா மாவட்டம் என்ற நிலையை அடைய தொழுநோய் விழிப்புணர்வு பணிகள் மற்றும் கண்டுபிடிப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story