ராணிப்பேட்டையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

X
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங் மற்றும் பி.இ. படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேற்காணும் கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அன்றைய தினம் காலை 10 மணி அளவில் எண்.9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை புரிந்து கலந்து கொள்ளலாம். தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்க ளின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுரத்து செய்யப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story

