சூலூர்: டிராவல்ஸ் அதிபர் தற்கொலை !

X
சூலூர் புதிய பேருந்து நிலையத்தைச் சேர்ந்த கார்த்தி (35) என்பவர், தனது சொந்த டிராவல்ஸ் நிறுவனம் நஷ்டமடைந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலால், மது அருந்திவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நேற்று முன்தினம் இரவு, சூலூர் அருகே காங்கேயம் பாளையம் ராயர் கோவில் பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கார்த்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், கார்த்தி கடந்த இரண்டு மாதங்களாக மது போதை நீக்கும் மையத்தில் சிகிச்சை பெற்று வந்ததும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்னர் மீண்டும் மது அருந்தியதும் தெரியவந்தது. தொழில் நஷ்டம் மற்றும் மதுப்பழக்கம் ஆகியவற்றால் மன உளைச்சலுக்கு ஆளான கார்த்தி, இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.கார்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

