அரசு பணம் சிக்கனமாக செலவழிக்கப்படும். தற்போது திமுக ஆட்சியில் அரசு பணம் ஊதாரித்தனமாக போய்க்கொண்டு இருக்கிறது என்ன முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேச்சு

X
திமுக ஆட்சியில் ஒரு ரூபாய் கொடுத்தால் கூட பத்து ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறார்கள்.அதிமுக ஆட்சியில் 100 ரூபாய் திட்டத்திற்கு செலவழித்தால் ஒரு ரூபாய்க்கு கூட விளம்பரம் செய்ய மாட்டார்கள்.அரசு பணம் சிக்கனமாக செலவழிக்கப்படும். தற்போது திமுக ஆட்சியில் அரசு பணம் ஊதாரித்தனமாக போய்க்கொண்டு இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பேச்சு... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,முன்னாள் அமைசருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி,கழக மகளிர் அணி துணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சந்திரபிரபா முத்தையா,மாவட்ட துணைச் செயலாளர் வசந்திமான்ராஜ்,வடக்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சிமுருகன், வத்திராயிருப்பு ஒன்றிய செயலாளர்கள் சேதுவர்மன்,சுப்புராஜ், அழகர்சாமி,வைகுண்ட மூர்த்தி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய போது.. அதிமுக ஆட்சியில் நெசவுத்தொழில் நெசவாளர்கள் பாதுகாக்கப்பட்டார்கள் திமுக ஆட்சியில் நெசவுத்தொழில் நசிந்து போய் இருக்கிறது நெசவுத் தொழில் செய்கின்றவர்கள் கண்ணீர் விடுகிறார்கள் நெசவாளர்களை கொடுமைப்படுத்தும் விதமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தைப்பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு சேலை,வேஷ்டி கொடுப்பதற்காகவும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் எம்ஜிஆரால் கொண்டுவரப்பட்ட திட்டம். திமுக ஆட்சியில் மக்கள் கஷ்டப்படுவதை சொல்ல கூட மந்திரியை பார்க்க முடியவில்லை குறைகளை சொல்ல முடியவில்லை விளம்பரத்தாலே திமுக ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் ஒரு ரூபாய் கொடுத்தால் கூட பத்து ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறார்கள் அதிமுக ஆட்சியில் 100 ரூபாய் திட்டத்திற்கு செலவழித்தால் ஒரு ரூபாய்க்கு கூட விளம்பரம் செய்ய மாட்டார்கள் அரசு பணம் சிக்கனமாக செலவழிக்கப்படும் தற்போது திமுக ஆட்சியில் அரசு பணம் ஊதாரித்தனமாக போய்க்கொண்டு இருக்கிறது. எடப்பாடியார் ஆட்சியில் மக்களுக்கு பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய், பொங்கல் தொகுப்பு கொடுத்தார். இன்றைக்கு நூற்றி முப்பது ரூபாய் கொண்ட பொங்கல் பரிசை ஸ்டாலின் கொடுத்துள்ளார். கேள்வி கேட்டால் கஜானா காலி என்கிறார்கள்.கஜானா காலி என்றால் ஆட்சி எதற்கு உங்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி நிறைவு பெற்றவர்களுக்கு மூன்றறை ஆண்டுகளாக எந்த பணமும் கொடுக்கப்படவில்லை. திமுக ஆட்சியில் அடித்தட்டு மக்களிலிருந்து விவசாயிகள்,அரசு அலுவலர்கள் வரை கஷ்டப்படுகிறார்கள். ஸ்டாலின் குடும்பம் தான் சந்தோஷமாக உள்ளது. நாட்டு மக்களுக்காக திமுக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. மூன்று லட்சத்து 56 ஆயிரம் கோடி தமிழக மக்கள் மீது கடனாக வாங்கி என்ன செய்தார்கள் என்று எடப்பாடியார் கேட்டு வருகிறார்.கடன் வாங்கி திமுக எந்த திட்டம் கொண்டு வந்தது. அதிமுக ஆட்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.உழைப்பவர்களை தேடி கண்டுபிடித்து பொறுப்பு தரக்கூடிய கட்சி அதிமுக. இளைஞர் பட்டாளம் அதிமுக வை தேடி வந்து கொண்டிருக்கிறது. தொண்டர்கள் நேசிக்கின்ற தலைவர் எடப்பாடியார். கல்லம் கபடமில்லாதவர் எடப்பாடியார். முதல்வரின் பிரச்சனையையே அவரால் தீர்க்க முடியவில்லை. யார்? அந்த சார் என்ற கேள்வி எல்லா இடங்களுக்கும் சென்று விட்டது. தேர்தல் வரை இந்த கேள்வி இருக்கும். ஆட்சி நடத்த முடிவில்லை என்றால் உடனே பதவியை விட்டு விலகுங்கள். விவாதம் இல்லாமல் பட்ஜெட் தொடர் நடக்கிறது என்றால் அது திமுக ஆட்சி இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். தொழிலும் தொழிலாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். பதவி ஏற்கும் டிரம்பும் இரட்டை இலையைத் தான் காட்டுகிறார்கள். கிளை கழக நிர்வாகியாக துவங்கி தனது உழைப்பால் முதல்வரானவர் எடப்பாடியார். திமுக அமைச்சர்கள் கலைஞர் குடும்பம் பின்னால்தான் சுற்ற வேண்டிய நிலை உள்ளது. புரட்சி தலைவரின் பிறந்த நாளில் அதிமுக ஆட்சி அமைய சபதம் ஏற்போம் என்று தெரிவித்தார்.
Next Story

