குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது

X
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினமான 26.01.2025 - அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்.கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்குறித்து விவாதித்தல். மக்கள் திட்டமிடல் இயக்கம் (People’s Plan Campaign) குறித்து விவாதித்தல்.இதர பொருட்கள் குறித்து விவாதித்தல். எனவே, 26.01.2025 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டு மென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story

