கடையம் கோயிலில் பாலாலய பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது

கடையம் கோயிலில் பாலாலய பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது
பாலாலய பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள கடையம் ராமநதி அணைச் சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நித்ய கல்யாணி அம்மன் உடனுறை வில்வ வனநாதர் கோவிலில் ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையடுத்து காலை கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், முதல் கால யாகசாலை பூஜையுடன் பாலாலய பூஜைகள் தொடங்கியது. இன்று காலை 5 மணிக்கு 2ம் கால யாக சாலை பூஜையைத் தொடர்ந்து காலை 6.30 மணிக்கு பாலாலய பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story