நாமக்கல்: மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.
Namakkal King 24x7 |21 Jan 2025 8:42 AM GMT
ஆந்திராவில் வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை போன்று தமிழக அரசும் மாதாந்திர உதவி தொகையை உயர்த்தி வழங்க கோரி கோஷங்களை எழுப்பினர்.
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அந்த வகையில் நாமக்கல் - மோகனூர் சாலையில் அமைந்துள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி தமிழக அரசை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையை கண்டித்தும், மாபெரும் சிறை நிரப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. ஆந்திராவில் வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை போன்று தமிழக அரசும் மாதாந்திர உதவி தொகையை உயர்த்தி வழங்க கோரி கோஷங்களை எழுப்பினர்.மேலும் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து நாமக்கல் உழவர் சந்தை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
Next Story