மஞ்சூர் கோவை சாலையில் மீண்டும் உலாவரும் யானை கூட்டம்...
Nilgiris King 24x7 |21 Jan 2025 9:12 AM GMT
மஞ்சூர் கோவை சாலையில் மீண்டும் உலாவரும் யானை கூட்டம்...
மஞ்சூர் கோவை சாலையில் மீண்டும் உலாவரும் யானை கூட்டம்... நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் 65 சதவீதத்திற்கும் மேல் வனப்பகுதிகளை கொண்டுள்ளது அடர்ந்து காணப்படும் வனப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றிகள் காட்டெருமைகள் மான் புலி சிறுத்தை யானை போன்ற வன விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்கு உலா வருவது வாடிக்கையாகி வருகிறது கடந்த சில நாட்களாக கரிய மலை பெரியார் நகர் மேல் குந்தா கெத்தை போன்ற பகுதிகளுக்கு யானைகள் கூட்டமாக விலை நிலங்களை பீட்ரூட் கேரட் தேயிலை தோட்டங்கள் சேதப்படுத்தி வந்தது தற்போது மஞ்சூர் கெத்தை கோவை செல்லும் சாலையில் மூன்று குட்டிகள் உடன் யானைகூட்டம் உலாவர்கிறது தனியார் வாகனங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனமுடன் வாகனங்களை இயக்க வனத்துறை அறிவுரை வழங்கி உள்ளனர் வாகனங்களை விட்டு வனப்பகுதியில் இறங்கவோ புகைப்படம் கூடாது எனவும் எச்சரிக்கையுடன் இறக்கவும் அறிவுறுத்தினர்.
Next Story