கோவை: கோவை குற்றாலத்தில் அமைச்சர் ஆய்வு !

சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் கோவை குற்றாலத்தில் கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடியுடன் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கோவை குற்றாலம் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு பல்வேறு வசதிகள் இல்லாமல் இருந்து வந்த நிலையில் நேற்று சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் கோவை குற்றாலத்தில் கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடியுடன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உடமைகளை வைப்பதற்கு பாதுகாப்பறை, உடை மாற்றும் அறை, கழிவறை வசதி, சாகச விளையாட்டுகள மற்றும் பார்க்கிங் வசதி, நுழைவுச் சீட்டு கொடுக்கும் இடம் புனரமைப்பு, சுற்றுலா பயணிகளின் ஓய்வறை, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து உள்ளனர். இவை அனைத்தையும் சுற்றுலாத் துறையின் சார்பில் செய்வதற்கான ஆய்வு தற்போது மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பேசினார். தொடர்ந்து கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா துறையின் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் இந்த துறை வனத்துறை சம்பந்தப்பட்டது. தற்போது வரை ரூ.9 கோடி ரூபாய் வரை ஊதியம் வழங்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறை அமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Next Story