குமரி : தனியார் மருத்துவமனை பாத்ரூமில் இளம்பெண் சடலம்

குமரி : தனியார் மருத்துவமனை பாத்ரூமில் இளம்பெண் சடலம்
நாகர்கோவில்
கன்னியாகுமரி அருகே தென்தாமரை குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெனிஷ்குமார் மனைவி ஹேமலதா (33). உடல் நலம் சரியில்லாத லதா  நாகர்கோவில் களியங்காடு இறச்சகுளம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக  சிகிச்சை பெற்று வந்தார். அவரை அவரது கணவர் ஜெனிஷ் உடன்  இருந்து கவனித்து வந்தார்.        இந்த நிலையில் இன்று காலை லதா தங்கி இருந்த அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்க சென்றார். நீண்ட நேரம் ஆகியும் பாத்ரூம் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஜெனிஷ் கதவைத் தட்டி மனைவியை அழைத்தார். ஆனால் அங்கிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெனிஷ் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறினார். விரைந்து வந்த அவர்கள் பாத்ரூம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது லதா அசைவற்ற நிலையில் கிடந்தார்.       மருத்துவ குழுவினர் அவரை பரிசோதித்த போது லதா இறந்து போனது தெரிய வந்தது. இதுகுறித்து இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் லதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் மருத்துவமனை பாத்ரூமில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story