முதல்வருக்கு பொங்கல் வைத்து கொண்டாடிய மாணவிகள்
Dindigul King 24x7 |21 Jan 2025 1:12 PM GMT
ஒட்டன்சத்திரம் மகளிர் கலைக்கல்லூரியில் புதுமைப்பெண் திட்டம் தந்த முதல்வருக்கு பொங்கல் வைத்து கொண்டாடிய மாணவிகள்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சின்னைய கவுண்டன்வலசில் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் பொங்கல் விழா கல்லூரி முதல்வர் வாசுகி தலைமையில் கொண்டாடப்பட்டது, கல்லூரியில் 7 துறைகளைச் சேர்ந்த மாணவிகள், கண்களை கவரும் வண்ணம் வண்ணமயமான நிறங்களில் கோலங்களிட்டும், நாட்டுப்புற கலைகளான கும்மியாட்டம், கோலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம்,உள்ளிட்ட நாட்டுப்புறக் கலை நடனங்களை ஆடியும், சர்க்கரைப் பொங்கல், பால் பொங்கல், கற்கண்டு பொங்கல், வெண்பொங்கல், உள்ளிட்ட விதவிதமான பொங்கல்கள் வைத்தும், கொண்டாடினர் குறிப்பாக, உயர்கல்வி படிக்கும் மகளிருக்கு புதுமைப்பெண் திட்டம் தந்த முதல்வருக்கு நன்றி எனக் கூறி கோலமிட்டு, பொங்கல் வைத்து கொண்டாடினர், மேலும் நடைபெற்ற கோலம் மற்றும் பொங்கல் போட்டிகளில் சிறப்பாக அலங்கரித்து இருந்த துறைகளுக்கு கல்லூரியின் சார்பாக சுழற் கோப்பை பரிசும் வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர், மற்றும் கல்லூரி ஆசிரியைகள் மாணவிகள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story