செங்குந்தபுரத்தில் கால பைரவருக்கு முளைப்பாரி ஏந்தி ஊர்வலம்

செங்குந்தபுரத்தில் கால பைரவருக்கு முளைப்பாரி ஏந்தி ஊர்வலம்
ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் கிராமத்தில் சிவாலயத்தில் கால பைரவருக்கு முளைப்பாரி ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அரியலூர் ஜன.22- ஜெங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் 9-ஆம் ஆண்டு முளைப்பாரிகை பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இக்கோயில் 2016-ல் உருவாக்கப்பட்டு பிரதி மாதம் தேய்பிறை அஷ்டமியில் மாலை 6.30 மணிக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. குறிப்பாக சனிக்கிழமை ராகு காலத்தில் வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைத்து விளக்கேற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்ற ஐதீகத்தால் வேண்டுதலுக்காக வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக தை தேய்பிறை அஷ்டமியில் 108 முளைப்பாரிகை எடுத்து பூஜை செய்வது வழக்கம் சிவனின் புருவத்திலிருந்து தோன்றியவர் ஸ்ரீ காலபைரவரை வழிபட்டால் முன்வினை நீங்கி திருமணம், பிள்ளைபேறு, உத்தியோகம், குடும்ப ஒற்றுமை,கடன் பிரச்சனை, கல்வி மேன்மை,மரணமில்லா பெருவாழ்வு கிட்டும் எண்பதும் எல்லா நலமும் வளமும் பெருகும் என்பதும் சாஸ்திரங்கள் கூறுகின்றன .பிரம்மாவின் ஆணவத்தை அடக்கி 5-வது தலையை தன் நக நுனியால் பைரவர் கிள்ளி எடுத்த காரணத்தால் அன்று முதல் பிரம்மா நாள் முகள் என்று அழைக்கப்பட்டார் என்பதும் வரலாறு பிரம்மன் தலையை கிள்ளி எடுத்ததால் பைரவருக்கு பிரம்ம ஹத்தி எனவும் கையில் சுமந்தபடியே உலகம் முழுவதும் அலைந்து திரிந்து காசியின் எல்லையை மிதித்த உடனே கையில் உள்ள பிரம்ம கபாலம் தெரித்து விழுகிறது. அன்று பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கி அதுவரை கபால பைரவர் என்பவர் ஸ்ரீ கால பைரவராக காசியில் தங்கி அருள் புரிகிறார் என்பது சாஸ்திரம். கால பைரவருக்கு செங்குந்தபுரத்தில் தேய்பிறை அஷ்டமியில் பூஜை செய்தும் முளைப்பாரிகை எடுத்தும் வழிபட்டவருக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது. . எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம் ஆனால் செவ்வாய்க்கிழமை அஷ்டமி மிகவும் சிறப்பானது. தை மாதம் தேய்பிறை அஷ்டமியில் இம்முளைப்பாரிகை எடுப்பதற்கு ஒரு மாத முன்பே பதிவுசெய்து டோக்கன் பெற்று கோவிலில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பூச்சட்டியில் அவர்களே நவதானியம் முளை நாற்று தெளித்து தினந்தோறும் மாலை ஸ்ரீ பைரவர் 108 போற்றி 9 நாட்களும் படித்து 9ஆம் நாள் மாலை 4 மணி அளவில் மேளதாளங்கள் முழுங்க ஊரை வலம் வந்து ஸ்ரீ கால பைரவர் கோயிலில் நம்பர் முறையில் வரிசையாக அமர்ந்து, வாழைக்குறுத்து இலை மேல் வெற்றிலை பாக்கு வாழைப்பழம் பத்தி ஏற்றி அகல் விளக்கேற்றி, பச்சரிசி பரப்பி அதன் மேல் முளைப்பாரிகை வைத்து 108 தோத்திரம் படித்து, உதிரி பூக்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை செய்யப்பட்டு பின் முளைப்பரிகையை மையத்தில் வைத்து கும்மி அடித்து முடித்து அருகில் திருக்குளத்தில் முளைப்பாரிகையை கரைத்துவிட்டு எல்லா வளமும் நலமும் பெற வேண்டி ஏராளமானோர் வழிப்பாடு செய்தனர். இந்நிகழ்ச்சியை ஊர் நாட்டாண்மைகள், ஊர் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்கின்றனர். முளைப்பாரிகை கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி பதிவு செய்தனர் முளைப்பாரிகை கடந்த ஜனவரி 13ஆம் தேதி நாற்று விடுதலும் 19ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தினமும் மாலை 6 மணிக்கு 9 நாட்களுக்கும் முளைப்பாரிகை பூஜை மற்றும் கும்மியடித்தல் நடைபெற்றது. நேற்று மாலை முளைப்பாரிகை ஊர்வலம் நடைபெற்றது ஏராளமான பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முளைப்பாரி எடுத்து வந்து பூஜை செய்தனர்
Next Story