ஆரணி நகராட்சியில் இணைக்க சேவூரில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றதில் ஆரணி எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு.

X
ஆரணி நகராட்சியுடன் இணைக்க சேவூர் ஊராட்சியில் மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் மக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றதில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்று சேவூரை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தார். ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சியை ஆரணி நகராட்சியுடன் இணைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் சேவூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் செவ்வாய்கிழமை மீண்டும் நடத்தப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், ஊராட்சி செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இக்கூட்டத்தில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆரணி நகராட்சியில் சேவூரை இணைக்க கடைசி 10 நாளில்தான் முடிவு எடுக்கப்பட்டு திடீரென சேர்த்துள்ளனர். இதற்கு முன்பு சேவூர் ஊராட்சியை இணைக்க போவதில்லை என்றே கூறி வந்தனர். மேலும் சேவூரில் பெரும்பாலானோர் கூலித்தொழிலாளர்கள் ஆவர். நகராட்சியில் இணைத்தால் வீட்டு வரி, குழாய் வரி, சொத்து வரி என அனைத்து வரிகளும் அதிகமானால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவர். மேலும் 100 நாள் வேலை திட்டத்தினை நம்பி பெண்கள் உள்ளனர். அவர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவர். ஆகையால் சேவூரை நகராட்சியில் இணைக்கக்கூடாது என கோரிக்கை மனு கொடுக்கிறேன். மேலும் இது குறித்து நகராட்சி துறை அமைச்சரிடமும் பேசியுள்ளேன். என்ற பேசினார். பின்னர் சேவூர் பகுதி கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சி.அப்பாசாமி என்பவரும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். பின்னர் இக்கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி பெற்றுக் கொண்டார். ஆரணி நகராட்சியுடன் இரும்பேடு ஊராட்சியை ஆரணி நகராட்சியுடன் இணைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் இரும்பேடு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மீண்டும் நடைபெற்றதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனஞ்செழியன் தலைமை வகித்தார், ஊராட்சி செயலர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்களின் கருத்துகள், மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து பையூர், இராட்டிணமங்கலம், முள்ளிப்பட்டு ஆகிய இடங்களிலும் செவ்வாய்கிழமை பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
Next Story

