இரயில்வே துறையில் அரசு பல் மருத்துவர் வேலை வாங்கி தருவதாக மோசடி நபர்

X
2024-ம் வருடம் டிசம்பர் மாதம் பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சாய்த்தீர்த்தா வயது 27 என்ற நபருக்கு Dating ஆப்-ல் பழகி, திருமண ஆசை மற்றும் இரயில்வே துறையில் அரசு பல் மருத்துவர் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.15,95,000-யை வங்கி கணக்குகள் மூலம் பெற்று ஏமாற்றிவிட்டதாக பெரம்பலூர் மாவட்ட சைபர்கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து 04.01.2025-ம் தேதி வழக்கு எண் 01/2025 பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், காவல் உதவி ஆய்வாளர் மனோஜ், காவல் உதவி ஆய்வாளர் (Technical) சிவநேசன், காவலர்கள் சுரேஷ், முத்துசாமி ஆகேியோர் கொண்ட குழுவினர் குற்றவாளிகளை தேடி கடந்த 19.01.2025-ம் தேதி ஆந்திரப்பிரதேசம் மாநிலம் புறப்பட்டனர். இவ்வழக்கில் எதிரியின் இருப்பிடம் அறிந்து ஆந்திரப்பிரதேசம் மாநிலம், ஸ்ரீ சத்யா சாய் மாவட்டம் கதிரி சென்று விசாரணை செய்து பி பரத் , த/பெ பி சந்திர சேகர் ஆச்சாரி -யை கைது செய்தனர். மேலும் எதிரியிடமிருந்து 2 செல்போன்கள், 02 சிம்கார்டுகள் , கைப்பற்றப்பட்டு, இன்று 21.01.2025-ம் தேதி எதிரி மற்றும் வழக்கு சொத்துக்களுடன் சைபர்கிரைம் தனிப்படை குழுவினர் பெரம்பலூர் வந்தடைந்தனர். இன்று எதிரி பி பரத் என்பவரை JM-II பெரம்பலூர் I/c JM-I அவர்களிடம் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் யாரும் டேட்டிங் ஆப்-இல் பழகி அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஏமாறவேண்டாம் மற்றும் தங்களிடம் சுங்க அதிகாரி போன்றோ, காவல் அதிகாரி போன்றோ அல்லது அரசு அதிகாரி போன்றோ பேசி தங்களின் மொபைல் எண் / ஆதார் எண் போதை பொருள் கடத்தல் கும்பலுடனோ / Money Laundering கும்பலுடனோ தொடர்புடையதாக கூறி அச்சுறுதினாலோ, டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாகவோ, டிரேடிங் மூலம் லாபம் ஈட்டலாம் என்றோ, Part Time Job என்றோ டாஸ்க் செய்து லாபம் ஈட்டலாம் என்றோ, பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாகவும், குறைந்தவட்டியில் கடன் தருவதாகவும், ஆன்லைன் ரம்மி மற்றும் போலியான லோன் ஆப் போன்றவற்றில் ஆசை வார்த்தைகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். மேலும் இணையவழி மூலம் பணமோசடி புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் “1930” என்ற இலவச அழைப்பு எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கவும். சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Next Story

