தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
Cuddalore King 24x7 |21 Jan 2025 6:14 PM GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம், கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அருணகிரி தலைமை தாங்கினார். வட்ட கிளை நிர்வாகிகள் செல்லவேல், திருநாவுக்கரசு, மாவட்ட தணிக்கையாளர் ராமநாதன், ராமச்சந்திரன், சுப்பிரமணியன், முருகேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட செயலாளர் பெரியநாயகம் அனைவரையும் வரவேற்றார். மாநில செயலாளர் அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கை விளக்க உரை மற்றும் சிறப்புரையாற்றினார். பௌத்தம போதகர் கலாமணி, மாவட்ட இணை செயலாளர் ஜெயவேல், துணைத்தலைவர் தேவராஜன், மின் ஊழியர்கள் ஜனநாயகம் முன்னணி சண்முகம், தமிழ்நாடு போக்குவரத்து அம்பேத்கர் தொழிலாளர் நல சங்க மாநில தலைவர் சின்னசாமி, மாநில பொதுச் செயலாளர் ரவி, ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் பாண்டியன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற ஆசிரியர் காப்பாளர் நல சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் கேசவன், வட்டக்கிளை தலைவர்கள் விருத்தாசலம் முரளி, ஸ்ரீமுஷ்ணம் ரங்கராஜன், திட்டக்குடி உமாபதி, வேப்பூர் கருப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். தொடர்ந்து புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது முடிந்தவர்களுக்கு 10 சதவீதம் சிறப்பு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். விருத்தாசலத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவித்திட வேண்டும். ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியக்குழு நிலுவைத் தொகை மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகை ஆகியவற்றை உடனே ரொக்கமாக வழங்கிட வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி 2 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளித்திட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் காசிலிங்கம் நன்றி கூறினார். கடலூர் மேற்கு மாவட்ட வட்ட, மாவட்ட, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story