விருத்தாசலம் தாலுகா அலுவலகத்திற்கு பொதுமக்கள் பேரணியாக வந்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Cuddalore King 24x7 |21 Jan 2025 6:17 PM GMT
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்தது
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விருத்தாசலம் அடுத்த டி.வி புத்தூர் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். வட்டாட்சியர் ஒப்புதல் வழங்கியும் அமைதி பேச்சு வார்த்தை நடத்தியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி யும் மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் தலைமையில் பொதுமக்கள் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு விருத்தாசலம் தாலுகா அலுவலகத்திற்கு வந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வருவாய்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story