ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் காதல் கணவனின் கரம் பிடித்த இளம் பெண்*

X
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் காதல் கணவனின் கரம் பிடித்த இளம் பெண்* திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை கோடியூர் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் மகள் பவானி(20) இவரும், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பரத்(24).தனியார் நிறுவன ஊழியர் என்பவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பவானியில் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். அதிர்ச்சியடைந்த பவானியின் பெற்றோர் ஓரிரு நாட்களிலேயே பவானியை பிடித்து வந்து அறிவுரை கூறி வீட்டுடன் வைத்திருந்தனர். இதற்கிடையே பவானிக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கப்பட்டது. இரு நாட்களுக்கு முன் மாப்பிள்ளை விட்டார் பவானியை பெண் பார்க்க வந்ததாக தெரிகிறது. அப்போது பவானி எதிர்ப்பு தெரிவித்தோடு அன்று இரவு பரத்துடன் வீட்டை விட்டு வெளியேறி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பெருமாள் கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு இன்று ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில் பவானி தனது காதல் கணவனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். மேலும் இருவரும் மேஜர் என்பதால் இரு தரப்பு பெற்றோரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு பரத்துடன் பவனியை அனுப்பி வைத்தனர்.
Next Story

