கன்னியாகுமரி ஆட்சித்தலைவர் ஆசிரியர்களுடன் கலந்தாய்வு
Nagercoil King 24x7 |22 Jan 2025 4:03 AM GMT
நாகர்கோவில்
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்- குமரி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தான் சிறந்த வழிகாட்டியாக அமைந்திட வேண்டும் எனவும், மாணவர்கள் தோல்வியுறும் பட்சத்தில் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுவதால், இதில் அதிக கவனம் செலுத்தி, ஆசிரியர்கள் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும் எனவும், மேலும் பொதுத்தேர்வுக்கு குறுகிய கால அளவே இருப்பதால் மாணவர்களுக்கு தொடர் பயிற்சி அளித்து, மாணவர்களின் கற்றலில் ஏற்படும் குறைபாட்டினை களையும் வண்ணம் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் எனவும், கன்னியாகுமரி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திட முழு பங்காற்றிட வேண்டுமெனவும் கூறினார். நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பள்ளிகல்வி) சாரதா, மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.
Next Story