பள்ளிக்கு சுற்று சுவர் கட்ட கோரிக்கை
Kallakurichi King 24x7 |22 Jan 2025 4:06 AM GMT
கோரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை ஒன்றியத்தை சேர்ந்த பழையபாலப்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி உள்ளது. இப் பள்ளியில் 40 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.இரு ஆசிரியர்கள் உள்ளனர். இப் பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டடத்தை அகற்ற இடையூறாக இருந்த சுற்றுச் சுவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது.அதன் பின் சுற்றுச் சுவர் கட்டப்படவில்லை. பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்டித் தரக்கோரிஎம்.எல்.ஏ., மாவட்ட கல்வி அலுவலர், ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ. ஆகியோரிடம் பல முறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் கிடையாது. பள்ளிக்கு சுற்றுச் சுவர் இல்லாததால் பள்ளி முடிந்து மாலை நேரங்கள் மற்றும் சனி,ஞாயிறு விடுமுறை நாட்களில் பள்ளி வளாகத்தில் சமுக விரோத செயல்கள் நடக்கின்றன. சுற்றுச் சுவர் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story