விவேகானந்தா கல்லூரியில் புத்தகங்கள் வெளியீட்டுவிழா
Nagercoil King 24x7 |22 Jan 2025 4:13 AM GMT
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் விலங்கியல் துறையும், நாகர்கோவில் சாராஸ் பதிப்பகமும் இணைந்து 'வன உயிரினங்களைப் பாதுகாத்தல்' மற்றும் 'விலங்குகளின் வாழ்வியல் முறைகள்' என்னும் இரண்டு புத்தகங்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்குத் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர். ற்றி. எஸ். ஜெயந்தி தலைமை தாங்கினார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி தாளாளர் எஸ். பைஜூ நிஷத் பால் புத்தகங்களை வெளியிட, முதல் பிரதியினை விவேகானந்தா எஜூகேஷனல் சொசைட்டியின் செயலாளர் சி. ராஜன் பெற்றுக் கொண்டார். இரண்டு புத்தகங்களின் நூலாசிரியரான விலங்கியல் துறைத்தலைவர் மற்றும் அகத்தரமதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர். டி. சி. மகேஷ் புத்தகச் செய்திகள் குறித்துக் கருத்துரை வழங்கினார். புத்தக வெளியீட்டு விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ மாணவியர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
Next Story