கருப்பூர் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Salem King 24x7 |22 Jan 2025 4:17 AM GMT
போலீசார் விசாரணை
சேலம் கருப்பூர் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜி. இவருடைய மகன் ரஞ்சித் (வயது 31), கட்டிட தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணமாகி வினோதினி, என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ரஞ்சித், தனது பெற்றோரிடம் கடந்த ஒரு வாரமாக மோட்டார் சைக்கிள் வேண்டுமென கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் ரஞ்சித் ஓட்டு வீட்டில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் அர்த்தனாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி ரஞ்சித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
Next Story