குமரி :  போதை டிரைவரால்  குளத்திற்குள் பாய்ந்த ஆட்டோ

குமரி :  போதை டிரைவரால்  குளத்திற்குள் பாய்ந்த ஆட்டோ
கருங்கல்
குமரி மாவட்டம் கருங்கல் அருகே மத்திகோடு பகுதியில்  சாலையோரம் மண்ணுக்குளம் என்ற குளம் உள்ளது. நேற்று மாலை இந்த குளத்தில் ஒரு ஆட்டோ கவிழ்ந்து கிடப்பதாக மத்திகோடு சந்திப்பில் இருந்த பொதுமக்களிடம் ஒரு பஸ் டிரைவர் தகவல் தெரிவித்துள்ளார். இதை அடுத்து பொதுமக்கள் சம்பவ இடத்தில் சென்று பார்த்தபோது ஒரு ஆட்டோ குளத்தில் இறங்கி சகதியில் சிக்கி நின்றது. ஆட்டோ டிரைவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். பொதுமக்கள் அவரை வெளியே வருமாறு அழைத்துள்ளனர் ஆனால் அவர் வெளியே வர மாட்டேன் என்றும், வெளியே வருவதாக இருந்தால் ஆட்டவுடன் தான் வருவேன் என்று அடம் பிடித்தார். அப்போதுதான் அவர் போதையில் இருப்பது தெரிய வந்தது.        அவர் ஆட்டோவை இயக்க முயன்றால் தண்ணீருக்குள் ஆட்டோ கவிழும் என்பதால் பொதுமக்கள் வலுக்கட்டாயமாக அவரை கீழே இறக்கினார். பின்னர் கயிறு கட்டி ஆட்டோ  மீட்கப்பட்டது. ஆட்டோ தண்ணீரில் கவிழாமல் சகதியில் சிக்கி நின்றதால் டிரைவர் உயிர் தப்பி உள்ளார் என பொதுமக்கள் தெரிவித்தனர். பஸ் டிரைவர் பார்த்து பொது மக்களுக்கு தகவல் தெரிவித்ததால் டிரைவரை காப்பாற்றியதாகவும் தெரிவித்தனர்.
Next Story