பெரியனுார் கிராமத்தில் அட்மா திட்ட வயல்விழா
Kallakurichi King 24x7 |22 Jan 2025 4:44 AM GMT
வயல்விழா
திருக்கோவிலுார் அடுத்த பெரியனுார் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் நடந்த அட்மா திட்ட வயல்விழாவிற்கு வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணகுமாரி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவி ராணிவிஜியராமன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் மத்திய, மாநில வேளாண் திட்டங்கள், பணமில்லா பரிவர்த்தனை, விதை இருப்பு விபரம் குறித்து விளக்கப்பட்டது.அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மைய வேளாண் பேராசிரியர் அய்யாதுரை விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை மற்றும் உளுந்து பயிர் சாகுபடி விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பூச்சி நோய் கட்டுப்படுத்துதல், உர மேலாண்மை, நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார். உதவி வேளாண் அலுவலர் ஜெயப்பிரகாஷ் வேளாண் துறையில் உள்ள மானிய திட்டங்கள் குறித்து பேசினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் மணிமேகலை, உயிர் உரத்தின் முக்கியத்துவம், உழவன் செயலி பயன்பாடு குறித்து விளக்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரகலாதன், செல்லன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
Next Story