கொளத்துப்பாளையம் பகுதியில் நாளை மின்தடை.

தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பகுதியில் நாளை மின்தடை.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே காலை 9-மணி முதல் மதியம் 2-மணி வரை கொளத்துப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான உப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூர்த்திநகர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மாரியம்மன்கோவில், அனுமந்தாபுரம், சின்னக்கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை தாராபுரம் செயற்பொறியாளர் கோபால்சாமி தெரிவித்துள்ளார்.
Next Story