விஷம் கொடுத்து மகனை கொன்ற தாய், காதலி கைது

விஷம் கொடுத்து மகனை கொன்ற தாய், காதலி கைது
மகனை கொன்ற தாய், காதலி கைது
விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் விஸ்வலிங்கம், 29; லாரி டிரைவர். கடந்த 17ம் தேதி வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார். உடலில் ரத்த காயங்கள் இருந்தன. வளவனுார் போலீசார் விசாரித்ததில், விஸ்வலிங்கம் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. அவருடன் குடும்பம் நடத்திய காதலி செல்வி, விஸ்வலிங்கத்தின் தாய் முனியம்மாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.குடிப்பழக்கம் கொண்ட விஸ்வலிங்கம், காதலி, தாயிடம் தொடர்ந்து தகராறு செய்து, தாக்கியுள்ளார். இவரது தொந்தரவை பொறுக்க முடியாமல் இருவரும் சேர்ந்து அவருக்கு, பூச்சி கொல்லி மருந்தை மாவில் கலந்து, தோசை சுட்டு கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்டவர் வாயில் நுரை தள்ளியபடி துடிதுடித்து இறந்தார்.இந்த சம்பவம் நடப்பதற்கு முந்தையநாள், விஸ்வலிங்கத்திற்கும், உறவினர்கள் சிலருக்கும் தகராறு நடந்தது. உறவினர்கள் தான்அவரை கொலை செய்ததாக நம்ப வைக்க,விஸ்வலிங்கம் இறந்த பின், அவரின் உடலில் கத்தியால் கிழித்து இருவரும் நாடகம் ஆடியது விசாரணையில் தெரிந்தது.
Next Story