திண்டிவனம் அருகே லாரி டிரைவர் தற்கொலை
Villuppuram King 24x7 |22 Jan 2025 6:40 AM GMT
லாரி டிரைவர் தற்கொலை
புதுச்சேரி, முத்திரையர்பாளையம், கல்கி நகரில் வசித்தவர் சிவக்குமார், 48; இவர், வாட்டர் சப்ளை கம்பெனியில் டிரைவராக வேலை செய்தார். சிவக்குமார் கடந்த 18ம் தேதி சென்னை ரெட்ஹில்ஸ் பகுதிக்கு லாரியை ஓட்டி சென்றுள்ளார். அங்கிருந்து தண்ணீர் ஏற்றிக்கொண்டு, திண்டிவனத்திலுள்ள தனியார் ஏஜென்சிக்கு சப்ளை செய்தார். அதன் பின்னர் சிவக்குமார் என்ன ஆனார் என்று தெரியவில்லை. லாரியில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ். கருவியை கொண்டு சோதனை செய்தபோது, சிவக்குமார் ஓட்டி வந்த லாரி திண்டிவனம் சலவாதி கூட்ரோடு அருகே இருப்பது தெரிய வந்தது.உறவினர்கள் உதவியுடன் நேற்று முன்தினம் தேடியபோது, அங்குள்ள மரத்தில் சிவக்குமார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரம் தெரியவில்லை. புகாரின் பேரில் ரோஷணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story