பள்ளி மாணவி மாயம் காவலர்கள் விசாரணை

நல்லம்பள்ளி அருகே 11ஆம் வகுப்பு மாணவி மாயம் காவலர்கள் விசாரணை
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட அதியமான்கோட்டை கக்கன்ஜிபுரம் பகுதியை சேர்ந்த 17 சிறுமி, கோபிநாதம் பட்டி யில் உள்ள விடுதியில் தங்கி, அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். பொங்கல் விடுமுறைக்கு சிறுமி தனது வீட்டிற்கு வந்த நிலையில், கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்த வெளியே சென்ற சிறுமி, பின்னர் வீடு திரும்பவில்லை அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும், எந்த தகவலும் கிடைக்க வில்லை.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தனர். அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்
Next Story