அரியலூர் அருகே ரயிலில் அடிப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி

அரியலூர் அருகே ரயிலில் அடிப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி குறித்து போலீசார விசாரித்து வருகின்றனர்.
அரியலூர்,ஜன. 21- அரியலூர் அருகே செவ்வாய்க்கிழமை ரயிலில் அடிப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார். அரியலூர் அருகேயுள்ள பொட்டவெளி, நடுத் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சரவணன்(40). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், செவ்வாய்க்கிழமை வெள்ளூர் ரயில் நிலையம் அருகே மூடப்பட்டிருந்த கேட்டை கடந்து சென்ற போது, நிஜமுதீன் சென்ற சம்பர் காந்தி விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் ரயில்வே காவல் துறையினர், சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story