சாலை பாதுகாப்பு மாத விழா போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கல்

சாலை பாதுகாப்பு மாத விழா போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கல்
அரியலூர் பகுதியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு மாத விழா போட்டியில் வென்ற மாணவிகளுக்கு மாவட்ட எஸ்பி தீபக் சிவாச் பரிசுகள் வழங்கி பாராட்டுதெரிவித்தார்.
அரியலூர், ஜன.21- அரியலூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், காவல் துறை சார்பில் மாணவிகளிடையே ஓவியம், பேச்சு , நடனம், நாடகம், இசை உள்ளிட்ட போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.விஜயராகவன் தலைமையில், அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்ற போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீபக் சிவாச், போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் செல்லம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story