தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் பள்ளிக்கு விடுமுறை
Virudhunagar King 24x7 |22 Jan 2025 9:02 AM GMT
தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் பள்ளிக்கு விடுமுறை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் ஒரே நாளில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது*
விருதுநகரில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் பள்ளிக்கு விடுமுறை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் ஒரே நாளில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது விருதுநகர் சூளக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் கேவிஎஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் இந்த பள்ளி இன்று காலை வழக்கம் போல் செயல்பட்ட நிலையில் பள்ளிக்கு மெயில் ஐடி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளியின் முதல்வர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டது இதை அடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்வதற்காக அங்கு குவிந்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த சூலக்கரை காவல் நிலைய போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர் இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் பள்ளி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சோதனை நடத்தி வருகின்றனர் இன்று காலை விருதுநகரில் உள்ள கல்லூரி ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த அதே மெயில் ஐடியில் இருந்து இந்த பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது தெரிய வந்துள்ளது ஒரே நாளில் கல்லூரி மற்றும் பள்ளிக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story