மக்கள் புறவழிச்சாலை இணைப்பு சாலை பகுதியில் சாலை மறியல் போராட்டம்*

X
அருப்புக்கோட்டை நகராட்சி ஜோதிபுரம் 24 வது வார்டு பகுதியில் தரமற்ற முறையில் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டதால் கழிவுநீர் வீதியில் தேங்கி நிற்பதாக புகார் தெரிவித்து அப்பகுதி மக்கள் புறவழிச்சாலை இணைப்பு சாலை பகுதியில் சாலை மறியல் போராட்டம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி 24 வது வார்டு பகுதியான ஜோதிபுரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்றது. இந்த கழிவு நீர் கால்வாய் தரமற்ற முறையில் சரியான முறையில் திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கழிவுநீர் கழிவு நீர் கால்வாயில் செல்லாமல் சாலையில் செல்கிறது கழிவுநீர் வெளியேறாமல் வீடுகளுக்குள் கழிவுநீர் தேங்குகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஜோதிபுரம் பகுதியில் புறவழிச் சாலை இணைப்பு சாலையில் திடீரென சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக அருப்புக்கோட்டை நகரில் இருந்து மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை செல்லும் புறவழிச் சாலை இணைப்பு சாலை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் மேலும் போராட்டம் நடத்திய பொதுமக்கள் அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகனிடம் தங்களது கோரிக்கை மனுபையும் வழங்கினர். போலீசாரின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story

