மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது
Virudhunagar King 24x7 |22 Jan 2025 9:18 AM GMT
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் செயலரும் மாவட்ட ஆட்சியருமான ஜெயசீலன் முன்னிலையில் இக்குழுவின் தலைவரும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம்தாகூர் தலைமையில் நடைபெற்றது.
பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டத்தில் முழுமை பெறாமல் நிலுவையில் உள்ள வீடுகளை கட்டிமுடிக்க பயனாளிகளுக்கு வங்கிகள் உதவ வேண்டும்; தெருநாய்களை கட்டுப்படுத்த மத்திய அரசு எஸ். ஓ.பி வழிகாட்டுதலை எளிமைப்படுத்த வேண்டும்- விருதுநகரில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் நிறைவில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில்,மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர் செயலரும் மாவட்ட ஆட்சியருமான ஜெயசீலன் முன்னிலையில் இக்குழுவின் தலைவரும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம்தாகூர் தலைமையில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும், தொடர்புடைய மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம், திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பொது விநியோகத்திட்டம், டிஜிட்டல் இந்தியா - பொது தகவல் மையம், பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், உட்பட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மாவட்டத்தில் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு 7 வாரமாக சுமார் 58 கோடி ரூபாய் ஊதியம் வராமல் உள்ளது இதை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்,விருதுநகர் மாவட்டத்தில் தெரு நாய் பிரச்சனை அதிக அளவில் உள்ளது அதைப்பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றும், மத்திய அரசின் எஸ். ஓ.பி வழிகாட்டுதலில் கடுமையான சட்டங்கள் இருப்பதால் தெருநாய்களை கட்டுப்படுத்த முடியாத அளவில் உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன அதனால் மத்திய அரசு இதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றார்.மத்திய அரசின் சிறுகுறு தொழிற்கடன் விண்ணபங்கள் அதிகளவில் நிராகரிக்கப்படுகிறது என்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டத்தில் கடன் வழங்க நொண்டிச்சாக்குகளை சொல்லக்கூடாது என்றார். பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டத்தில் முழுமை பெறாமல் நிலுவையில் உள்ள வீடுகளை கட்டிமுடிக்க பயனாளிகளுக்கு வங்கிகள் உதவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.பரந்தூர் விமான நிலையம் மத்திய மாநில அரசுகள் இணைந்து தேர்வு செய்யப்பட்ட இடம்.விஜய் தற்போது அங்கு சென்று மக்களை சந்தித்திருப்பது ஜனநாயகத்தில் வரவேற்கத்தக்கது.தமிழகத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து இதில் முடிவெடுக்க வேண்டும் யாரும் அரசியல் செய்யக்கூடாது என்றார். பெரியார் பற்றி சீமான் பேசி வருவதற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர்,பெரியார் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் என்றும் பெரியார் அரசியலை விடுத்து சீமான் தன்மீது வரும் விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் கள் என்பது விவசாயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை என்பதால் காங்கிரஸ் கட்சி எப்போதும் அதை ஆதரிக்கும் என்றார். இக்கூட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் .ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பேட்டி: மாணிக்கம் தாகூர் - பாராளுமன்ற உறுப்பினர் (விருதுநகர்)
Next Story