கோவை: பாதாள சாக்கடை பணி - உயிர்பலி அபாயம் !

கோவை: பாதாள சாக்கடை பணி - உயிர்பலி அபாயம் !
உக்கடம் கோட்டைமேடு 82-வது வார்டு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் வீதியில், பாதாள சாக்கடை பணிகள் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.சாலையோரம் தோண்டப்பட்ட மண் குவிக்கப்பட்டு, இரும்பு தடுப்புகள் இருப்பதால் விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு.
ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வரும் கோவையில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுமையாக நிறைவேறாமல், பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, உக்கடம் கோட்டைமேடு 82-வது வார்டு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் வீதியில், பாதாள சாக்கடை பணிகள் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.சாலையோரம் தோண்டப்பட்ட மண் குவிக்கப்பட்டு, இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.இந்நிலையில், இன்று காலை அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர், சாலை பழுதடைந்து இருந்ததால் வழுக்கி விழுந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து, பணிகள் நடக்குதா இல்லையா? உயிர் பலி ஏற்படாமல் பாத்துக்கோங்க என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அந்தப் பகுதிக்கு வருகை தந்தபோது, அவர் வருகைக்காக மட்டுமே சிறிய பகுதியில் மண் அகற்றப்பட்டதாகவும், பின்னர் மீண்டும் முன்பு போலவே இருந்ததாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Next Story